மாம்ச சிந்தையும்,
ஆவியின் சிந்தையும்.
( ரோமர் 8:6 )👇
👉 தனக்குரியதை மட்டும் தேடுவது மாம்ச சிந்தை.
( பிலி 2:21, யோசுவா 7:19,20,21 ),
பிறருக்குரியதையும் தேடுவது ஆவியின் சிந்தை.
( ஆதி 13:8,9, & 50:15--21 )
👉 தனக்கு பேர், புகழை தேடுவது மாம்ச சிந்தை.
( எண் 23:1,2, தானி 4:29,30,31 ),
தேவனுக்கு மகிமையை செலுத்துவது ஆவியின் சிந்தை.
( சங் 115:1, யோவான் 3:30, & 7:18, 1தெச 2:6 )
👉 பிழைப்புக்காக ஊழியம் செய்வது மாம்ச சிந்தை.
( 2 ராஜா 5:20--27, பிலி 3:18,19 )
அழைப்புக்காக ஊழியம் செய்வது ஆவியின் சிந்தை.
( மத் 4:19,20, அப் 20:22,23,24 )
👉 உணர்ச்சி வசப்பட்டு செயல்படுவது மாம்ச சிந்தை.
( மத் 16:21,22,23, & 26:50,51,52 ),
உணர்ந்து செயல்படுவது ஆவியின் சிந்தை.
( லூக்கா 19:8, அப் 6:1--5 )
👉 பரவசத்தில் மதிமயங்குவது மாம்ச சிந்தை.
( யாத் 32:3---7 )
பரிசுத்தத்தில் மனம் மகிழ்வது ஆவியின் சிந்தை.
( லூக்கா 1:47, ரோமர் 14:17 ).
👉 மனிதனை பிரியப்படுத்துவது மாம்ச சிந்தை.
( கலாத் 1:10, எண் 22:16,17 ),
தேவனை பிரியப்படுத்துவது ஆவியின் சிந்தை.
( 1தெச 2:4, அப் 4:18,19 )
👉 சுகபோகமாய் வாழ்வது மாம்ச சிந்தை.
( 1 தீமோத் 5:6, லூக்கா 15:13 )
சுயத்தை வெறுத்து வாழ்வது ஆவியின் சிந்தை.
( லூக்கா 9:23, 1கொரி 9:27, கலாத் 2:20, பிலி 3:7,8,9 )
👉 தன்னை குறித்து மேன்மை பாராட்டுவது மாம்ச சிந்தை
( லூக்கா 10:25--29, 1சாமு 17:4--10,42,43,44 )
பிறரை குறித்து மேன்மையாக கருதுவது ஆவியின் சிந்தை.
( பிலி 2:3,19,20,21,22,25,26 ).
Strictly we are spirit filled church. There is no place for flesh here. When we are filled with spirit we can easily identify fleshy thoughts and purify ourselves.